சிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்
சுயசரிதை
பெயர்: இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன்
பிறந்த இடம்: கெடா மாநிலம்
பிறந்த தேதி: 8 ஆகஸ்ட் 1959
கல்வி: ஆரம்பக் கல்வி பீடோங் தமிழ்த் தோட்டப் பள்ளி. இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு – சுங்கை பட்டாணி, புக்கிட் மெர்தாஜாம், கோலாலம்பூர்.
தொழில்: மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். 2006-2013 வரையில் இவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
சாதனைகள்
எப்பொழுதும் தடைகளைக் கடந்து மனம் சோர்ந்திடாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது இவரது கோட்பாடாகும். இதுவரையில் 18 முனைவர் (டாக்டர்) பட்டதாரிகளையும் 22 முது நிலைப் பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளார். பல்துறை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை (தமிழ், ஆங்கிலம், மலாய்) உள்நாட்டு, அனைத்துலகக் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் படைத்துள்ளார்.
கருத்துகள்
மாணவர்கள்
மாணவர்கள் முதலில் தங்களைத் தாங்களே வெல்லும் திறனைப் பெற்றிருத்தல் வேண்டும். தங்களிடத்திலுள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைக்களையும் வழிமுறைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் கற்றல்-கற்பித்தல் மூலம் தங்களால் இயன்ற அளவு மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்துகின்றனர். மாணவர்களின் மனவோட்டம், கற்றல் திறன் ஆகியவற்றை முன்னிருத்தி கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் போது மாணவர்களின் வளர்ச்சியைக் காண்பது திண்ணம் என்கிறார்.
பெற்றோர்கள்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிறுசிறு வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியோடு வரவேற்று பெற்றோர்களின் உழைப்பையும் தியாகத்தையும் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.