கணிதத்தில் சிந்தனை உருவாக்கம்
கணிதப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் வீட்டில் இருக்கும் பெற்றோரும் இங்கே கொடுக்கப்படும் 3 முக்கியக் கூறுகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.
எண் உணர்வு / Number Sense
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு இருக்கின்றது. ஆகவே, பெற்றோர்கள் வீட்டில் வளரும் தங்களின் பிள்ளைகளிடத்தில் எண் உணர்வை வளர்ப்பதில் முதன்மை இடம் வகிக்கின்றனர். மாணவர்கள் தங்களின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ளுதல், கடையில் பொருள் வாங்க அனுப்புதல், வீட்டில் அடுக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையை அறிதல், எளிமையான ஆடை தயாரித்தல், கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கூறுதல் போன்ற கணிதக் கூறுகள் அடங்கிய நுட்பமான வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம். எண் உணர்வு என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்.
எண் பிணைப்பு / Number Bond
எண்களைச் சமபாகமாக அல்லது சமபகுதியாகப் பிரிப்பதை எண் பிரிப்பு என்கின்றோம். இந்த எண் பிணைப்பை மலேசியக் கல்வி அமைச்சு கணிதப் பாட நூலில் ஆங்காங்கே வழங்கியிருக்கின்றது. ஆனால், மாணவர்கள் இந்த எண் பிணைப்பை 6 வயது முதல் 12 வயதிற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இதனை வாய்மொழியாகவே மட்டும் முதலில் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் பயிற்சித்தாளில் சில கேள்விகளைக் கொடுத்து பயிற்சிகள் வழங்கலாம்.
எண் மயக்கம் / Number Patterns
எண் மயக்கம் என்பது மாணவர்கள் கொடுக்கப்படும் எண்கள் சமமின்றிப் பிரித்துக் காட்டுவதை உணர்த்துக்கின்றன. இந்த மயக்கம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் சிந்தனைக் கணிதப் பாடத்தில் சிதறும் தன்மையைக் கொண்டிருக்கும். மொழிகளில் சிதறும் பண்பு நேர்மறையாகக் கருதப்படுக்கின்றன. ஆனால், இந்தக் கணிதப் பாடத்தில் சிந்தனை சிதறவிடுவதை முக்கியமாக கருதுகின்றன. சிந்தனை பரந்து நிற்கும் பொழுது மாணவர்களின் உயர்தரச் சிந்தனைத் திறனை சிறப்பாக வளர்க்க முடியும். ஆகவே, எண்களில் மாணவர்களின் கணிதச் சிந்தனையைச் சிதறச் செய்வது ஆசிரியர்களும் பெற்றோரகளும் முக்கிய இடம் வகிக்கின்றனர். வாய்மொழியாக கேட்பதனால் மாணவர்களின் கிரகித்தல் தன்மை சிறப்பாக வளரும்.
திரு.சதிஸ்குமார்
ஆசிரியர், நூலாசியர், கணிதப் பட்டைறைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார், கணிதப்பாட தேர்வு வழிகாட்டி நூல்களை வெளியிடுகின்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.