சிந்தனையாளர்களின் கருத்துகள்: விரிவுரையாளர் கு. நாராயணசாமி

சிந்தனையாளர்களின் கருத்துகள்: விரிவுரையாளர் கு. நாராயணசாமி

சுயசரிதை

பெயர்:   முனைவர் கு. நாராயணசாமி

பிறந்த இடம்: கெர்லிங் , புக்கிட் ரோத்தான்

பிறந்த தேதி:  14 பிப்பரவரி 1947

கல்வி: தொடக்கக் கல்வி

யை மன்மவுத் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக் கல்வி  கோல சிலாங்கூரிலுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் பள்ளியிலும் , பயின்றார். இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

தொழில்தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக 1969 – 1977 வரை செவ்வனே பணியாற்றினார்.  1980 – 1984 வரையில் இடைநிலைப்பள்ளி ஆசிரியராகவும் 1985 – 2003 வரை  ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரைஞராகவும் பணியாற்றினார். 2002 – 2010 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணி செய்து பின்னர் ஓய்வு பெற்றார். சிந்தனை தொடர்பான ஆசிரியர் பயிற்சிப் பிரிவின் முதன்மைப் பயிற்றுநராக இவர் பணியாற்றி மேலும் மதிப்பீட்டுக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

மாணவர்கள்

கவன சிதைவுகளைத் தவிர்த்தால் நம் மாணவர்கள் சிறக்க இயலும்.

ஆசிரியர்கள்

படிக்கப் படிக்க ஆசிரியர் பணி சிறக்கும்.

பெற்றோர்கள்

பேணிப் பாதுகாக்காத பயிரும் பேணிப் பாதுகாக்கப்படாத பிள்ளைகளும் நல்ல விளைச்சலாக இரா.

      விருதுகள்

2012 – ஆம் ஆண்டு ‘நல்லாசிரியர்’ விருது, தமிழ்க் கல்விக்கான ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான விருது, 2015 – ஆம் ஆண்டு “கோப்பியோ” எனப்படும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் ஒருங்கிணைப்பு விருது என வழங்கப்பட்டுக் கௌரவிக்கப் பெற்றார்.

ஆலோசனைகள்:

கற்றல் கற்பித்தல்

மாணவர்களே கண்டறிந்து சிந்தித்துக் கற்கச் செய்யும் முறைமைகள் எவையாயினும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

கல்விக் கொள்கை
எல்லாருக்கும் நிறைவான அடிப்படைக் கல்வி கிட்ட வேண்டும். குறிப்பாக, முதல் மூன்று ஆண்டுகளில், வாசிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில், அடிப்படை ஆற்றல்களைப் பெற வேண்டும். மெது பயில்வோரை அடையாளம் கண்டு, நான்காம் ஆண்டிலிருந்து தொழில், தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கான அடிப்படைகளை அமைக்கும் கல்வியை வழங்க வேண்டும். இடைநிலைப் பள்ளியில், இவர்கள் விரும்பும் தொழில், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளைத் தெரிவு செய்து கற்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இத்தகைய கல்விக் கொள்கையும் கல்வி ஏற்பாடுமே உகந்ததாக இருக்கும்.

Share this post

Leave a Reply